எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி..

'பாம்பாட்டி பழனியே.. பதில் சொல் இதற்கு' என்கிற தலைப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'நீ சரியான ஆம்பளையா இருந்தா, வேஷ்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா..வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தா..
கொடநாடுல கொள்ளை அடிச்சு, கொலைகள் செஞ்ச குற்றவாளிகளை ரெண்டு கடிகாரம், ஒரு கரடி பொம்மையை திருடுனாகங்கன்னு கைது செய்து வெளியில் விட்டது ஏன்?
இந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்திக் கொடுத்ததா சந்தேகிக்கப்படுகிற ஒருத்தனுக்கு, சம்பவம் நடந்த இருபதே நாளில், மாநில வர்த்தக அணிச் செயலாளர் பதவி கொடுத்தது ஏன்?
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய புலனாய்வு அறிக்கையில், குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஐந்து பேரும் அடையாம் காட்டிய ஆத்தூர் இளங்கோவனுக்கு, மாவட்டச் செயலாளர் பதவியை தந்தது ஏன்?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.