4-வது நாளாக, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு-நிவாரண உதவி..

On the 4th day, Chief Minister Stalin's study-relief aid ..

சென்னையில், கடந்த 6-ந்தேதி நள்ளிரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நீரை அகற்றும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனாலும், பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால், பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக நேரில் பார்வையிட்டார். அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று 4-வது நாளாக மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

தியாகராய நகர் விஜயராகவா சாலையில் உள்ள வெள்ள பாதிப்புகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்தார்.

பின்னர், மாம்பலம் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Share this story