ஒன்றரைக் கோடி தொண்டர்களே வாரீர் : ஏப்ரல் 24 காட்சியும் சாட்சியும் பாரீர்

அஇஅதிமுக.வில் நிகழும் பரபரப்பான அரசியல் சதுரங்கத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள மூன்று செய்திக்குறிப்புகள் வருமாறு :
* பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையை, தி.மு.க.வுக்கு மேலாக விமர்சிக்கவேண்டும் என முடிவெடுத்து, எடப்பாடி ஜெயக்குமாரு, கே.பி.முனுசாமி கூடவே, எடப்பாடியின் மகன் மிதுன் மேற்பார்வையில் நடக்கும் ஐ.டி.விங் என சகலரும் விமர்சனம் செய்வதின் நோக்கம்..
தமிழக அரசியலை அண்ணாமலை vs எடப்பாடி என கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக தானாம். பார்ர்ராரா.. நம்ம பவுன்மணிக்கிட்ட பல பாதாளத் திட்டங்கள் அணிவகுத்து கெடக்குதாக்கும்.
* எடப்பாடியின் பணத்துக்கு கும்மியடிக்கும் கும்பலுக்கும்., அம்மாவின் அடையாளமான ஓ.பி.எஸ்ஸுன் கொள்கைக்கு கொடி ஏந்தும் தொண்டனுக்குமான வேறுபாட்டை, ஏப்ரல் 24 காவிரிக்கரை காட்சியாக நின்று சாட்சியாக சொல்லும்.
* சூரிய வெளிச்சத்தில்தான் இலைகள் துளிர்க்கும் என்னும், விஞ்ஞான தத்துவத்தையே தகர்த்தெறிந்து, அது
சந்திரனாலும் சாத்தியமாகும் என்ற ராமச்சந்திரன் உமிழ் நீரும் இனித்திட உச்சரித்த உயரிய வார்த்தை "உரிமைக்குரல்" என்றால்..
அந்த மன்னாதி மன்னன், தான் மடியிட்டு வளர்த்த மகோன்னத தொண்டர்களுக்கு வழங்கிப் போன சாஸ்வத உரிமையை மடப்பாடி என்னும் மண்பாடி பறிக்கும் என்றால்...
கழகத் தொண்டர்கள் உரிமைக்குரல் எழுப்ப, ஒன்றிணைய வேண்டியது.. ஏப்ரல் 24 பொன்னி நதித்கரை புரட்சியில் தானே.
ஆதலால், ஒப்பில்லா தாய் தந்த தப்பில்லா தங்கமகன் அழைக்கிறார் வாரீர் வாரீர்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் முழங்கியுள்ளார்.