எதிர்க்கட்சிகள் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு..

Opposition parties in a frenzy Both adjourned.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது. 

கூட்டத்தொடர், இன்று 2 வது நாளாக கூடியது.  எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே, இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே, எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தனர்.

Share this story