ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு : இணைந்து செயல்பட முடிவு..

 

opsttv

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறினர். திருச்சி மாநாட்டின்போதே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் தெரிவித்ததாகவும், உரிய நேரம் வந்ததால் இப்போது சந்தித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
 

Share this story