பா.ஜ.க.வுக்கு பார்சல் ரெடி : மருது அழகுராஜின் மூன்று தகவல்கள்..

By 
marudhu143

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள மூன்று தகவல்கள் வருமாறு :

* பா.ஜ.க. தன்னை ஒரு தலைவனாகவே மதிக்கவில்லை என புலம்பும் எடப்பாடி எப்படியாவது பா.ஜ.க.வோடு, தான் 2024-ல் கூட்டணி என்பதாக பேசி நம்பவைத்துக் கொண்டே, 

தேர்தல் ஆணையத்தில் தனது தலைமை அபகரிப்புக்கு அங்கீகாரம் பெற்றுக் கொண்டு, அதன் பிறகு பா.ஜ.க.வை கழற்றி  விடலாம் என கணக்குப் போடுகிறார்.

ஒரு வேளை, இதற்கு வேலுமணி தங்கமணி போன்ற பா.ஜ.க.வின் பிடியில் உள்ள ஆட்கள் ஒத்துவர மறுத்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டு..

2019-ஐ போலவே, அதனை தோல்விக் கூட்டணியாக்கவும் அந்த தோல்விக்கு காரணமே பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்ததுதான் என்கிற ஒரு பொதுக்கருத்தை வழக்கம் போல அ.தி.மு.க. வுக்குள் உருவாக்கி, பா.ஜ.க. வை 2024  தேர்தலுக்கு பிறகு கழற்றி  விடலாம் என்னும்  பிளான்-B ஐயும் எடப்பாடி தயாரித்து வைத்திருக்கிறார் .

இதனை மையமாக வைத்துதான் கீழ் மட்ட அ.தி.மு.க.தொண்டர்களிடம் பா.ஜ.க. மீதான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை குறிப்பாக அண்ணாமலை எதிர்ப்பு என்பதை எடப்பாடியின் வலைதளப் பிரிவு திட்டமிட்டு செய்து வருகிறது.

எப்படி பார்த்தாலும், உலகப் பிரசித்தி பெற்ற துரோக ஸ்பெஷலிட் எடப்பாடி அடுத்த துரோகத்தை பா.ஜ.க.வுக்கு பார்சல் கட்ட இப்போதே பேப்பரையும் நூல் கண்டையும் கையில் எடுத்து விட்டார் என்பதே உண்மை.

* 2014-  மோடி வேண்டும் என்று இந்தியாவே தீர்ப்பெழுதியபோது.. தமிழகமோ எங்களுக்கு மோடி வேண்டாம், லேடியே போதும் என தீர்ப்பு தந்தது.

2019- மோடியே நீடிக்க வேண்டும் என  இந்தியா தீர்ப்பெழுதியபோது, தமிழகமோ மோடி வேண்டாம் என்பதையே திரும்பவும் தீர்ப்பாக்கியது..

2024-  இந்தியாவின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், இந்த முறை மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என தமிழக மக்கள் பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே, பிரதான கட்சியான அ.தி.மு.க.வை  உடைத்து மோடிக்கு தமிழகத்தில் இருந்து எந்த ஆதாயமும் கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி என்றால்.. அந்த துரோகியின் மூஞ்சியை காண விருப்பமில்லாமல் மோடி கடந்து போயிருப்பது நியாயம் தானே...

* எடப்பாடியை எம்ச்ச்சீயாருக்கு நிகர் என நாக்கு கூசாமல் நாமாவளி பாடியும்.. அம்மாவுக்கு நிகர் என்று ஆலாபனை செய்தும் பிழைப்பை ஓட்டும், மூத்த இளைய நடுத்தர ஊடக வியாதிகளின் உள் மனது அறியும் பவுன்மணி எடப்பாடி பதினைந்து சதவீதத்தை தாண்ட முடியாத பதர் என்பது..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story