4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது : 26-ந்தேதி அவை ஒத்திவைப்பு

By 
Parliament adjourned on the 4th adjournment on the 26th

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் 4-வது நாளாக முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 

செல்போன் ஒட்டு கேட்க திட்டமிடப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது. 

புதிய மத்திய அமைச்சர்களைக் கூட பிரதமர் மோடியால் அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை. 2-வது நாளாக, கடந்த செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றம் எந்த அலுவலையும் கவனிக்க முடியாமல் முடங்கியது.

புதன்கிழமை பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி நீடித்ததால், நேற்று அவை நடவடிக்கை முடங்கியது.  

இந்நிலையில், 4-வது நாளாக இன்றும் மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், மக்களவை திங்கள்கிழமைக்கு (26-ந்தேதி) ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

Share this story