வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு; ஏன் தெரியுமா?

By 
vs3

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன் நிறைவேறியது.

இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நேற்று பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி போட்டோ எடுத்துக் கொண்டார்.

இன்று காலை டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தாார். அப்போது, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வாழ்த்தி குரல் எழுப்பினர்.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சட்டென பின் நகர்ந்தார். அத்துடன் நோ... நோ... காலில் விழக்கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார். வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

 

Share this story