11 மருத்துவக் கல்லூரிகளை திறக்க, சென்னை வருகிறார் பிரதமர் மோடி..

Prime Minister Modi is coming to Chennai to open 11 medical colleges.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க, ஜனவரி 12 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

* செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்பதே ‘இன்னுயிர் காப்போம் திட்டம்  ஆகும். 

தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மருத்துவமனைகளில்  சிகிச்சை அளித்து, சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.
*

Share this story