பிரதமர் மோடி சென்னை வருகை : ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை - அப்பாயின்மென்ட்..
Fri, 7 Apr 2023

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின்போது, அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு, எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.