எதிர்க்கட்சியினர் தொடர் அமளிக்கிடையே, பிரதமர் மோடி நிகழ்த்திய உரை..

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசிய போது எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை அமைதி காக்கும்டி சபாநாயகர் அறிவுறுத்திய போதும், எதிர்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் எதிர்கட்சியினரின் அமளிக்கிடையே பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"மாநிலங்களவையில் பல மூத்த உறுப்பினர்கள் இந்த சபைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இங்கு நடக்கும் விஷயங்களை நாடு மிகவும் ஆர்வத்தோடு உற்று நோக்குகிறது.
துரதிர்ஷ்டவசமாக இந்த அவையில் சிலருடைய குரல், இந்த நாட்டிற்கும், இந்த சபைக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும். பாஜக அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.