கழகம் காப்போம் : ஓபிஎஸ் தரப்பு முழக்கம் 

By 
marudhu154

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

எடப்பாடியின் சுயநல வெறியையும் தன் நலத்தை விட இயக்கத்தின் எதிர்காலமே பெரியது என்கிற அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களின் பெருந்தன்மையையும்.. கழகமே உலகமென வாழும் பிரதிபலன் பாராத தொண்டர்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

இதனை புரிந்துகொள்ளும் பக்குவமோ முதிர்ச்சியோ எடப்பாடியிடம் கடுகளவும் இல்லை.

சரி..அவரிடம் இல்லாத பக்குவம் அவரைச் சுற்றயிருக்கும் ஒருவரிடத்தாலாவது இருக்குதா என பார்த்தால்.. சிரங்குக்காரனுக்கு சொறிபவனே சொந்தக்காரன் என்னும் பரிதாப நிலைதான் அங்கே..

இப்போது.. கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தொண்டர்களிடம் வந்து நிற்கிறது.

ஆம்.. அனகாபுத்தூர் ராமலிங்கம் என்னும் தொண்டன் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு.. அதில் தொண்டர்களே எஜமானர்கள் என்னும் ஒப்பற்ற ஜனநாயகத்தை முன்னிறுத்தியவர் நம் புரட்சித்தலைவர்.

இன்று அதன் பொன்விழா காலத்தில் கட்சிக்கும் கழக நிறுவனர் எம்.ஜி.ஆரின் லட்சியத்திற்கும் ஆபத்து வந்திருக்கிறது.

அதுவும் ஒளிய வந்தவன் ஓனர் ஆக ஆசைப்படுவது போன்ற எடப்பாடியின் அதிகாரப்பித்தை காரணமாக கொண்டு என்றால்.. அந்த இழுக்கையும் அழுக்கையும் அகற்ற வேண்டியது தொண்டனின் உயிர் கடமையல்லவா.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story