தரமான சம்பவங்கள், தமிழகமெங்கும் நடக்கும் : மருது அழகுராஜ் திட்டவட்டம்

marudhu124

'அபகரிப்பு' பித்துப்பிடித்து அலையும் எடப்பாடி, விலை வைத்து ஆட்களை பிடிக்க, வலை எடுத்து திரிகிறார்.

நிதியைக் கொண்டு நீதியை வளைக்க, மதி குழம்பி அலைகிறார்.

பணத்தை வைத்து, ஜனத்தை வாங்கலாம் என, மனக்கணக்கு போடுகிறார்.

கொள்ளை அடித்த பொருளாதாரம் கொண்டு, பொதுக் குழுவை கொள்முதல் செய்வதில் குறியாக இருக்கிறார்.

மொத்தத்தில், காசை வைத்தே கட்சியை திருடலாம் என கனா காண்கிறார்.

ஏறெடுத்துப் பார்க்கவும், மக்கள் விரும்பாத தன் எருமை முகத்தை அச்சடித்து, உறுப்பினர் அட்டை என ஊர் கூடி துப்புவதற்கு உத்தரவு போடுகிறார்.

ஆனால், எண்ணியது செய்திடல் வேண்டும்; எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும்;

நீதிக்குத் தலைவணங்கி நடந்திட வேண்டும்; நினைத்தது யாவும் முடித்திட வேண்டும்
என்றே..

புரட்சித்தலைவர் போதித்து வளர்த்த நேசத்து தொண்டர்கள், நிதிக்கு மங்காத நீதி மான்கள் என்பதை.. ஏலக்கடை எடப்பாடிக்கு எடுத்து உணர்த்தும் காலம் எதிரே நிற்கிறது.

சிவகங்கை சீமை கொடுத்த கருப்பு பலூன் எதிர்ப்பும், கண்டன சுவரோட்டிகளும், சண்டாளன் எடப்பாடி முகத்துக்கு தொண்டர்கள் நடத்திய சாணி அபிஷேகமும்.. இனி, தமிழகம் முழுதும் தாராளமாகும்.

துரோகி எடப்பாடியே.. கழகத்தை விட்டு வெளியேறு என்னும் தீந்தணல் எதிர்ப்பு திசையெட்டும் ஒலிக்கும்.

கழகக் கொடியின் கெளரவம் குலைக்கும் மடப்பாடிக்கு, கருப்புக் கொடி எதிர்ப்பு, தமிழ் நாடெங்கும் நடக்கும்.

உன் வன்புணர்வு அரசியலை நீயே வாபஸ் வாங்கும்வரை, நீ தலை காட்டும் இடமெல்லாம், உனக்கு தரமான சம்பவம், தவறாமல் நடக்கும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
*

Share this story