அரசியல் ஆட்டம்: பாஜக வேட்பாளராகும் கமல், ரஜினி பட நடிகை..

By 
bjplogo

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களுடன் நடித்த நடிகை கேரளாவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை ஷோபனா . இவர் நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நடிகை ஷோபனா அரசியலில் குதிக்க இருப்பதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story