கதையல்ல நிஜம் : மருது அழகுராஜ் சூசக கேள்வி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்,
'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை.. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..' எனும் எம்.ஜி.ஆர். பட பாடல் வரிகளுக்கேற்ப எழுப்பியுள்ள கேள்விக்கணைகள் வருமாறு :
'பண்ணையார் ஒருவரது தோழமையில் இருந்த பெரிய குடும்பம் ஒன்று.
மூன்று குடும்பமாக பிரிந்தது.
ஒன்றாக இருந்த அந்த குடும்பத்தின் ஒற்றுமையை தகர்த்து
துண்டாக்கி முடித்ததும்,
துண்டுகளில் ஒன்றை மட்டும்
தூபமிட்டு வளர்ப்பதும்,
பண்ணையின் முயற்சியும்
பாரபட்ச நரி சூழ்ச்சியுமே என்பதை,
ஊர் உலகம் மட்டுமன்றி
உடைந்த அந்த குடும்பங்களும்
உளமார அறிந்த போதும்..
சதிகார பண்ணை காலில்
சரணடைந்து கிடப்பது ஏன்?
அதிகாரம் கொண்டு
சதிகாரம் செய்வதின்
உண்மையை உணர்ந்தும்,
ஒன்று பட்டு நின்று காட்ட
உறுதிதனை ஏற்காமல்,
பண்ணையின் காலுக்கு
பாதபூஜை செய்வது ஏன்?
'ஒளியத் தெரியாதவன்
தலையாரி வீட்டில்' என்னும்
ஊர் பேசும் பழமொழி போல்..
பேர் போன குடும்பம் - இப்படி
ஆகாத பண்ணையிடம்
அபயம் கேட்டு கிடப்பது ஏன்?
மானத்தை இழந்து
மண்டியிட்டு வாழ்வது ஏன்?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.