முன்னேற்பாடு பணிகள் : கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Reservation Tasks Chief Stalin's Consultation with Collectors

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழைக் காலத்தில், 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது. 

அதிக சேதம் :

கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நிலையில் இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டது. 

இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆலோசனை :

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இதில் தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share this story