3 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை; மத்திய அரசு வழங்குகிறது..

By 
kisan

ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி பி.எம். கிசான் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயிகளுக்கு அப்படியே கிடைக்கிறது.

வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்நிலையில் 14-வது தொகை மே மாதம் இறுதியில் விடுவிக்கப்படும் என தெரிகிறது. இந்த தொகையை பிரதமர் மோடி வழங்க உள்ளார். 
 

Share this story