காவி அரசியல் திட்டங்களும், கழகங்களின் பரிதாபங்களும்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'தி.மு.க.அரசின் அமைச்சரவை மாற்றத்தை அக்கட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தார் என்பதைவிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்திருக்கிறார் என்பது தான் தமிழக மக்களின் பேசு பொருளாக இருக்கிறது.
எதிர்க்கட்சி மாடத்தை தனது செயற்பாட்டின் மூலம், எடப்பாடியிடம் இருந்து அண்ணாமலை கைப்பற்றி விட்டார் என்பதே நிதர்சனம்.
இத்தோடு நிற்காமல், அண்ணா திமுகவின் அரசியல் எதிர்காலத்தையும் பா.ஜ.க. தன்வசப்படுத்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, முழுவீச்சில் முயற்சி செய்யும் என்பது நிச்சயம்.
இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிற அளவுக்கு மதிநுட்பமோ திறமையோ அரசியல் சாதுர்யமோ நற்பெயரோ எடப்பாடியிடம் இல்லை என்பதுதான் பா.ஜ.க.வுக்கு காலம் உருவாக்கி கொடுத்திருக்கும் சந்தர்ப்பமும் பரிசும் ஆகும். மொத்தத்தில், இரண்டு திராவிட கட்சிகளையும் வெவ்வேறு கோணங்களில் வீழ்த்தப் பார்க்கிறது காவி அரசியல்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.