பாவத்துக்கான சம்பளம் போனஸாக தரப்படுகிறது : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

'கடவுள் இருக்கான் குமாரு' என்ற தலைப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
'மக்கள் திலகம் வகுத்து கொடுத்த, மாற்றக் கூடாத விதிகளை காலில் போட்டு மிதித்த கயவர்கள்..
தன்னலம் பாராது, தன் உடல் நலமும் பேணாது, தன் ஆயுளின் முக்கால் பாகத்தை கட்சியின் நலத்துக்கே கரைத்திட்ட, காலமகள் தந்திட்ட
கோலமகளை..
பொதுச் செயலாளர் பதவியில் இருந்தே நீக்குவதாய் விதிகளை திருத்தி, சதி செய்த சண்டாளர்கள்..
நாலரை ஆண்டு கால ஆட்சி நடத்த ஒத்துழைத்த ஓ.பி.எஸ்ஸை நீக்குகிறோம் என்பதாக, தொண்டர்கள் தீர்ப்பை துச்சமென தூக்கி வீசியவர்கள்..
இன்று..ஈரோட்டு தெருவில் நின்றுகொண்டு, தி.மு.க. தேர்தல் விதிகளை மீறுகிறது என்பதாக ஊளையிடுவதை பார்க்கும்போதுதான் புரிகிறது..
துரித உணவு காலத்தில், பாவத்துக்கான சம்பளம் போனஸோடு சேர்த்து துரிதமாகவே தரப்படுகிறது.
ஆம்.. கடவுள் இருக்கான் கொமாரு.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*