ரஜினியால் முட்டிக்கொண்ட சீமான்-ராகவா லாரன்ஸ் சண்டை; முடிவுக்கு வந்தது..

 

By 
rag2

நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்த ரஜினி இப்படம் வெளியாகுவதற்கு முந்தைய நாள் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றார். இந்த பயணத்தின் போது பல அரசியல் தலைவர்களை சந்தித்த ரஜினி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது அவரது சொந்த விருப்பம். ரஜினிகாந்த் காலில் விழுந்துவிட்டதாலே வெங்காய விலை ஏறிவிட்டதா?" என ஆதரவு தெரிவித்திருந்தார். ரஜினி- யோகி ஆதித்யநாத் இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், சீமானை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

அதில், "சீமானுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தலைவருக்கு எதிராக பேசும்போது நான் உங்களுக்கு எதிராக பேசியுள்ளேன். ஆனால் இப்போது நீங்கள் அன்புடன் பேசியுள்ளீர்கள். அதே அன்புடன் நானும் உங்களை விரைவில் சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு சீமான், நடிகர் ரஜினியை குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தபோது நடிகர் ராகவா லாரன்ஸ், சீமானுக்கு எதிராக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story