சிறையில் இருந்துகொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில்பாலாஜி: அண்ணாமலை குற்றச்சாட்டு..

By 
kvai

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட திமுக அமைச்சர்களுக்கு சிறையில் இருந்தே கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜி தான் என்றும் சிறையில் இருந்து தினமும் அவர் செல்போனில் பேசி அமைச்சர்களிடம் ஐடியா கொடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

ஆனால் இந்த முறை திமுக தங்க சுரங்கத்தையே கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பதிவான வாக்குகளில் 60% வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த முறை திமுக தங்க சுரங்கத்தையே கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பதிவான வாக்குகளில் 60% வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் பின்னப்பட்டுள்ளது என்றும், சதியின் காரணமாக அவரது பெயர் சொல்லப்பட்டுள்ளது என்றும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

Share this story