கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? : காங். தலைவர் சூசக தகவல்

By 
dks

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

இதனால் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், கர்நாடக புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி ஏம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக புதிய முதல்-மந்திரியை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை கட்சி மேலிடத்திடம் கொடுத்து விட்டோம். நான் டெல்லி செல்லவில்லை; என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன்.

இன்று எனக்கு பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூஜைகளில் பங்கேற்கபதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். புதிய முதல்-மந்திரி யார் என்ற முடிவை டெல்லி தலைமையிடம் விட்டுவிட்டோம் அவர்கள் முடிவு எடுப்பார்கள்" என்று கூறினார்.

இதனிடையே, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா டெல்லிக்கு விரைகிறார். முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவதில் டிகே சிவக்குமார் - சித்தாரமையா இடையே போட்டா போட்டி நிலவும் நிலையில், சித்தராமையாவின் டெல்லி பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Share this story