ஆன்மாவின் கடிதம் : அன்பு தொண்டர்களே.. அதிமுக வரலாற்றுச் சுவடுகளை உணர்வீர்..

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா ஆத்மா உரைவீச்சாக, உணர்வுபூர்வமாக, தம் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் நுட்பமாய் உணரும் பொருட்டு, கட்சி நலன் கருதி, தமிழக மக்கள் நலம் வாழ அன்புடன் சொல்வதாய் அமைந்த வண்ணம்..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தெளிவுரை வருமாறு :
'திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு இடையூறு செய்ததாக, என்னால் அமைச்சர் பதவியில் இருந்தே துரத்தப்பட்ட ஆர்.பி.உதயகுமார்..
பா.ம.க.வுக்கு அந்தரங்க ஆளாக இருந்துகொண்டு, கட்சிக்கு துரோகம் செய்தார் என மந்திரி சபையில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நான் விரட்டி அடித்த கே.பி.முனுசாமி..
வருங்கால முதல்வரே என தனது அல்லக்கைகளை விட்டு, தனக்குத் தானே காசு கொடுத்து போஸ்டர் அடித்ததை கண்டுபிடித்து சபாநாயகர் பதவியில் இருந்தே, நான் அப்புறப்படுத்திய ஜெயக்குமார்..
போதைப்பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனங்களுக்காக நான் ஒதுக்கி வைத்த சரக்கு சண்முகம்..
தி.மு.க.வின் ஐ.பெரியசாமியோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கட்சிக்கு துரோகம் இழைத்தது கண்டறியப்பட்டு என்னால் ஆத்தூருக்கு அகதியாக விரட்டப்பட்ட நத்தம் விசுவாசம் இல்லாத நாதன்..
இவர்களோடு சேர்ந்து கொண்டு பல வருடங்களாக, நான் வாய்ப்பு வழங்காமல் ஒதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் சீனிவாசன் என.. ஒட்டுமொத்த துரோகக் கூட்டமும் ஒன்று சேர்ந்து கொண்டு.. என்னால் நீண்டகாலம் புறந்தள்ளப்பட்ட எடப்பாடி என்கிற பைனான்சியருக்கு பக்கவாத்தியம் வாசிப்பதற்கு காரணம்..
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்தே என்னை நீக்கி, அவமானப்படுத்தவும்.. என் மீது அந்த நச்சுக்கிருமிகள் தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் வன்மத்தை கக்கவும்தான் என்பதை என்னை உளமார நேசிக்கும் கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த ஓ.பி.எஸ்க்குத் தான் எனது முதல்வர் பதவியை ஒன்றுக்கு இரண்டு முறை நம்பிக் கொடுத்தேன்.
எனக்கு பின்னால் கழகத்தை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கே தரப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே எனது நோக்கமாக இருந்தது. எனவே, கழகக் கண்மணிகளாகிய நீங்கள், துரோகி எடப்பாடி தலைமையிலான சதிகாரக் கும்பலை துரத்தி அடிக்க வேண்டும்.
புரட்சித்தலைவர் வகுத்த கட்சியின் சட்டவிதிகளை திருத்தி சிதைத்து, அதன்மூலம் இயக்கத்தையே அழிக்க முனையும் எடப்பாடி, ஒரு விஷக்கிருமி என்பதை என் அன்புத் தொண்டர்கள் புரிந்துகொண்டு ஓ.பி.எஸ்ஸின் கரத்தை வலுப்படுத்த வேண்டுகிறேன்.
ஆம்.. அம்மாவின் ஆன்மா தன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து எழுதிய கடிதமாக இதனை வாசியுங்க.. கழகத்தின் வருங்காலம் குறித்து யோசிங்க.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*