'தன்னெழுச்சியும், திணறும் திருச்சியும் சொல்லும்' : எடப்பாடி மற்றும் திமுக.வுக்கு மருது அழகுராஜ் சூடு..
Apr 20, 2023, 01:49 IST

'தன்னெழுச்சியும் திணறும் திருச்சியும் சொல்லும்' : எடப்பாடி மற்றும் திமுக.வுக்கு மருது அழகுராஜ் சூடு
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள, 'வெயிலுக்கும் வேர்க்கும்.. தீர்க்கமான அரசியல் அனல் குறிப்பு' வருமாறு :
"பன்னீர்செல்வம் போன்ற ஒரு விசுவாசமிக்க தொண்டனை பெற்றது என் பாக்கியம்"
இப்படி, தன் அரசியல் வாழ்வில் எந்த ஒரு மனிதர் மீதும் வைக்காத நம்பிக்கையை, புரட்சித்தலைவி அம்மா ஓ.பி.எஸ் மீது வைத்தார் என்றால்.. அந்த மகத்தான மனிதரை மட்டும் அல்ல, அவருக்கு மகுடம் சூட்டிய அம்மாவையுமே சேர்த்து எடப்பாடி நீக்குகிறார்..
இந்த அநீதிக்கு எதிரான புரட்சி, அரசியல் கடந்து, தமிழகத்தில் உருவாகிவிட்டது. இதனை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் உறுதிபட உரைத்துள்ளார்.