சந்திரபாபு நாயுடுவை திடீரென சந்தித்த ஸ்டாலின்; அதிரடி மாற்றங்கள்.?

By 
mksn

இந்தியாவின் அடுத்த பிரதருக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்ற முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையில் பாஜக தனித்து 242 தொகுதிகளும் கூட்டணியோடு சேர்ந்து 292 இடங்களையும் பிடித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி இணைந்து 234 இடங்களை தட்டி சென்றுள்ளது. இந்தநிலையில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க ஆந்திரா மாநிலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவும், பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார் ஆதரவும் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால் மீண்டும் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகும். இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று பாஜக கூட்டணி கட்சி கூட்டமும், இந்தியா கூட்டணி கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு முழு ஆதரவை தெரிவித்தார். அதே போல இந்தியா கூட்டணி எதிர்கட்சி வரிசையில் அமரவும் முடிவு செய்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவும் சந்தித்து பேசிக்கொண்டனர். 

இது தொடர்பாக புகைப்படத்தை பகிர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தேன். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன் என தெரிவித்துள்ளார். மேலும் . சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார் என்றும், அவர் தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்றும் உறுதியாக நம்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Share this story