அதை, புரிந்துகொண்டு ஸ்டாலின் செயல்பட வேண்டும் : டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி நினைவாக பேனா சின்னம் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தற்போது, நிதி நிலைமையில் தத்தளித்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மக்கள் வரி பணத்தில் கடலில் பேனா சின்னம் அமைப்பது சுற்று சூழலை பாதிக்கும். இதனை மீனவர்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு வேறு இடத்தில் சொந்த கட்சி நிதியில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோரின் எண்ணமாக உள்ளது. அதை புரிந்துகொண்டு ஸ்டாலின் செயல்படவேண்டும். அதுதான், தமிழ்நாட்டிற்கும் நல்லது, அவருக்கும் நல்லது.
அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றி, வருகிற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட்டோம். ஆனால், தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை தர மறுத்த காரணத்தால், நாங்கள் போட்டியிடவில்லை' இவ்வாறு அவர் கூறினார்.