புது யுத்தம் தொடக்கம் : ஓபிஎஸ் தரப்பு முழக்கம் 

marudhu103

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'வழக்கம்போல்..எடப்பாடி குவித்த நிதி, எம்.ஜி.ஆர் வகுத்த விதியை வென்றிருக்கு.

நீதியை நம்பாதே, நீதிபதியை நம்பு. குறிப்பாக, ஓய்வு பெற்ற நீதிபதியை நம்பு என்பதை சூழல் மீண்டும் சொரணை வர சொல்லி இருக்கு.

ஜனநாயக படுகொலையை ஜீவகாருண்ய நடவடிக்கை என்பதாக முலாம் பூசி முடித்திருக்கு.

காங்கிரஸில் இருந்து அன்று மொத்தமாக வெளியேறி கழகத்தை அரவணைத்த அதே நிகழ்வை, 

இப்போது கழகத்தில் இருந்து வெளியேற வைத்து அதனை கைப்பற்றி கொள்ளலாம் என்னும் கணக்கு போடும் கட்சியின் கைவண்ணம் கலந்திருக்கு..

வன்னியருக்கு பா.ம.க; ஆதிதிராவிட மக்களுக்கு வி.சி.க; முதலியாருக்கு பு.நீ.க; உடையாருக்கு ஐ.ஜே.க; தேவேந்திர குல வேளாளருக்கு புதக; கவுண்டருக்கு ஆக்ரமிப்பு அ.தி.மு.க. என்னும் வரிசையில்..

நமக்கு எங்கேப்பா என்னும் தென்திசை கேள்விக்கு.. எடப்பாடி அபகரிப்பு எதிர்காலம் வகுத்திருக்கு.

அதாவது, முல்லா வீட்டு கோழிக் குஞ்சுகளின் கழுத்தில் கறுப்புத் துணி கட்டப்பட்டிருப்பதை பார்த்த ஒருவர், என்ன முல்லா இது? என்று கேட்க..

அதுவா, அதன் தாய்க்கோழி செத்துப் போச்சு. அதனால அதன் குஞ்சுகள் துக்கம் அனுஷ்டிக்கின்றன என்றார் முல்லா.

அப்படியா..எப்படி தாய்க் கோழி செத்தது என கேட்க, முல்லா சொன்னார்,

நான்தான் பிரியாணி போட்டு விட்டேன் என்றார் முல்லா.

இப்படித்தான் ஒருவன், எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளை மாற்றி; புரட்சித்தலைவி அம்மாவை நீக்கி.. அவர் வசித்த கொடநாடு பங்களாவுல கொலை கொள்ளை நடத்தி.. அம்மா அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ்ஸை நீக்கி, இத்தனையும் செஞ்சுபுட்டு..

"புரச்ச்சீத் தலைவர்" எம்ச்ச்சீயார்.. "புரச்ச்சீத் தலைவி" அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்கின்னு சொல்லிக்கு அலையுறான்..

அவன் பின்னாடி, அம்மா போட்டோவ ஜோப்புல வச்சிக்கிட்டு, சிலதுக சுத்துதுன்னா.. இதை என்ன சொல்லறது..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story