திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது: உதயநிதி பெருமிதம்

By 
udhayanidhi6

கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் மற்றும் வேப்பனஹள்ளி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோரின் இல்லத் திருமண விழா கிருஷ்ணகிரி, மற்றும் குந்தாரப்பள்ளியில் நடைபெற்றது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

'இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு கலப்புத் திருமணத்தினை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மணமக்கள் புகுந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திடும் வகையில் வாழ்ந்திட வேண்டும். குறிப்பாக பிறக்கப்போகின்ற குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். இதில், குறிப்பாக கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலமாக தகுதியான அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதோடு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருதால், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் வளர்ச்சிப் பணியில் பயணித்து வருவதாக குறிப்பிட்டார்.

 

Share this story