தமிழக அரசியலை சுத்தப்படுத்த வேண்டும்: அண்ணாமலை அதிரடி..

By 
dmkbjp

மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

இன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தான். பிரதமர் மோடியை மதுரை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது என்பது வேள்வி என்றும் அவரை அழைத்து வரும் வரை எங்களுக்கு ஓய்வு கிடையாது.

முதல்வர் பழைய செருப்பை போட்டுக்கொண்டு அரசியல் நடத்த வேண்டும் என நினைக்கிறார். அந்தப் பழைய செருப்பே அவரை  கடிக்க தான் போகிறது. அவர் சொல்கின்ற பொய்களுக்கு எல்லாம் எங்களுக்கு வாக்குகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார்.

மேலும் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு மோடி மீண்டும் வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்களும் தமிழக அரசியரை சுத்தப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு 2024 ஒரு களமாக இருக்கும் என்றார்.

Share this story