அந்த எஸ், இந்த எஸ், அதுக்கு நடுவே ஐ.பி.எஸ் : மருது அழகுராஜ் விமர்சனம் 

By 
marudhu159

'அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தி.மு.க.ஆட்சியில் நடந்த நடக்கும் மற்றும் நடக்கப் போகும் ஊழல்களை அம்பலப்படுத்துவதிலும், சில பல ஊழல்களை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்துவதிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டய கிளப்புகிறார் என்றால்..

ஊழல் என்ற சொல்லையே உச்சரிக்கக் கூட உத்தமர் எடப்பாடி வெட்கப்படுகிறார். உதாரணமாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ஊழல் என்று பொதுவெளியில் பேசிய எடப்பாடி இன்றுவரை சட்டமன்றத்தில் அது குறித்து வாயைக் கூட திறக்கவில்லை. நீதி மன்றங்களில் வழக்கு எதையும் தொடுக்கவும் இல்லை.

இப்படியாக, ஒரு எதிர்க்கட்சி கடமையை எடப்பாடி தட்டிக் கழிக்க அந்த வாய்ப்பை அண்ணாமலை தட்டித் தூக்குகிறார்.

மேலும், ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் வாய்க்கால் வரப்பு பிரச்சினையை மெல்ல மெல்ல ஐ.பி.எஸ் க்கான வாய்ப்பாக மாற்ற ஒரு நேர்த்தியான திரைக்கதை எழுதிய அரசியலை பா.ஜ.க. திரைமறைவில் இருந்து முன்னெடுக்கப் பார்க்கிறது.

இதையெல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவமற்ற எடப்பாடி தரப்போ.. மினரல் வாட்டர் சகிதமாக மண்சோறு சாப்பிட்டுத் திரிகிறது.'

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story