2015-ம் ஆண்டு செயற்கை வெள்ளம்.. ஆனால், இம்முறை வந்தது இயற்கை வெள்ளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By 
stalinvoice

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தலைநகர் சென்னையை இந்த மழை தலைகீழாக புரட்டிப்போட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தால் கடல் போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மழை பாதிப்புக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து பின்னர் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது. 

இதற்காக சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள வெள்ளநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது. உதாரணமாக, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நாம் மறந்திருக்க முடியாது. அப்போது மீனம்பாக்கத்தில் பெய்த மழை 34 செமீ. ஆனால் இப்போது மீனம்பாக்கத்தில் 36 மணி நேரத்தில் 43 செமீ மழை பெய்துள்ளது. இது மிக மிக அதிகமாகும்.

வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம். ரூ.4000 கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Share this story