பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாள் நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு
Aug 10, 2021, 14:48 IST

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல், செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கலைவாணர் அரங்கில் சட்டசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.