திமுகவுக்கு என் மீது பயம் இருப்பதால் தான் ஆட்டுக்குட்டினு சொல்றாங்க.! - அண்ணாமலை..

By 
trpr

கோவை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை:

தேர்தல் களம் சூடாக இருப்பது போன்று கோவையில் சூடாக உள்ளது. சரியான நேரத்தில் சின்னத்தை விண்ணப்பித்து கேட்டு பெறாததால் நாம் தமிழர் கட்சியினர் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். தன் மீதான தவறை மறைக்க தினம் ஒரு வார்த்தையை,  தினம் ஒரு தத்துவம் என சீமான் பேசிக் கொண்டிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார். பிரதமர் குறுகிய காலத்தில் தமிழக வர உள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தமிழகத்துக்குள் எட்டி பார்க்கிறார். முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு சம்பாதிக்கலாம் என இருக்கிறார்கள். முதல்வர் வீதிக்கு வந்தால் மக்கள் அவர்மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

பணம் அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர். பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். 

முதல்வர் வீதிக்கு வந்தால் மக்கள் அவர் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும். ஆனால் அவர் வருவதில்லை. முதலமைச்சரை 10 கிலோமீட்டர் ரோடு ஷோ வரச் சொல்லுங்கள் பார்ப்போம். எத்தனை பேர் முதல்வரை காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம்,

நான் சவால் விடுகிறேன். கச்சத்தீவு விவகாரம் பாஜக கையில் எடுத்தவுடன் உண்மை தெரியவந்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய் சொல்லி வருகிறார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மாபெரும் துரோகம் செய்திருக்கிறது.

திமுகவினருக்கு என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் என்றார்.

மேலும், தமிழகத்தில் குறிப்பாக தந்தை பெயர், தாத்தா பெயர் வைத்துகொண்டு அரசியலுக்கு வந்தார்களோ அவர்கள் அனைவரும் எவ்வளவு கொச்சையாக பேச முடியும் என்பதில் அவர்களுக்குள்ளேயே ஒரு போட்டி நிலவுகிறது. இதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என அண்ணாமலை ஆவேசமாக கூறினார். 

Share this story