மிக பிரமாண்டமான மகளிர் மாநாடு : பிரதமர் மோடி நலத்திட்ட அறிவிப்புகள்..

The Greatest Women's Conference Prime Minister Modi's Welfare Announcements ..

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் மக்களைக் கவர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை செவ்வாய்க்கிழமை, மிக பிரமாண்டமான மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிரயாக்ராஜ் நகரில், இந்த மாநாட்டுக்காக மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்புகள் :

நாளை, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

அப்போது, உத்தரப்பிரதேச மாநில பெண்களை கவரும் வகையில், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

பெண்களுக்கு கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை, அனைத்து துறைகளிலும் அதிகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஏராளமான உதவிகள் நாளை வழங்கப்பட உள்ளது.

சுமார் 80 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் முதலீட்டு தொகை வழங்கப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நாளை வழங்கப்படுகிறது.

மொத்தத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி உதவியை பிரதமர் மோடி வழங்குகிறார். 

20 லட்சம் பெண்கள் :

இதை தவிர, பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இதில், சுமார் 20 லட்சம் பெண்கள் பயன் அடைய உள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டமும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
*

Share this story