அதிமுக - காத்திருக்கும் கடைசிக்காட்சி : மருது அழகுராஜ் பார்வை 

marudhu108

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :

"முடிந்தது என நினைக்கும் பல இறுமாப்புகளில் இருந்தே, புரட்சிகள் பல முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளை அழித்து முடித்தோம் என்னும் ராணுவத்தால் ஜெயித்த ராஜபக்க்ஷே சகோதரர்களின் ஆணவத்தில் இருந்தே, அவர்களது அழிவு ஆரம்பமானது.

முன்னேறிப் போகிறோம். எதிரிகள் நம்மை எதிர்கொள்ள முடியாமல் வழி விட்டு ஒளிகிறார்கள் என்னும் மமதையில் துள்ளிய ஹிட்லருக்கு தெரியாது; அது, ரஷ்யர்களின் பனிப் புதை குழிகளின் அழைப்பு என்பது.

ஆம், உங்களின் முடியலா.. இல்லை, உங்களுக்கான விடியலா.. என்பதை உங்களது பாவ புண்ணியங்கள் தீர்மானிக்கும். கர்மா உங்களுக்கு உரித்தானதை தந்தே தீரும்.

என்னவொன்று, அக்கிரமக்காரர்கள் என்றால், கொஞ்சம்  ஆடவிட்டு சாய்க்கும்.

அநியாயத்துக்கும் நல்லவர்கள் என்றால், அவர்களை கொஞ்சம்  வாட விட்டு வாய்ப்பு தந்து வாழ்த்தும்.

கதைகளில் சினிமாக்களில் மட்டுமல்ல, நிஜத்திலுமே கடைசிக்காட்சியில்தான்,  தர்மத்துக்கானவெற்றி உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story