கடந்ததும் கசந்ததும் : மருது அழகுராஜ் உரை
Mon, 1 May 2023

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
பத்தாண்டுகள் போராடிப் பெற்ற வாய்ப்பை இரண்டே ஆண்டுக்குள் மக்களின் வெறுப்பாக மாற்றியிருக்கிறது தி.மு.க ஆட்சி.
முதல்வரிடம் மட்டுமே இது குறித்தான கவலை இருப்பதாக தோன்றுகிறது. எஞ்சியோரிடத்தில் இதுதான் தங்களுக்கான கடைசி சந்தர்ப்பம் என்பதை போன்ற அவசரமும் அறுவடையும் நடக்கிறது.
ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு க.வில் ஏற்பட்டிருக்கும் தொடர் பிளவுகள் தங்களுக்கு அடுத்தடுத்த சந்தர்ப்பங்களை தரும் எனும் நம்பிக்கை ஒன்றே தி.மு.க.வின் இத்தகைய கூச்சமற்ற தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.