100 சதவீதம் வாய்ப்பே இல்லை : ஜெயக்குமார் பேச்சு

jayakumar3

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதே முரண்பாடு தான்.

* திமுகவின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

* கட்சி அலுவலகத்தை சூறையாடியவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

* ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து.

* அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால், இணைப்பு மட்டும் சாத்தியமில்லை.

* ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Share this story