ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை : நடிகர் சுமன் பேட்டி

suman

ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம். அவரது ஆட்சியில் விமான நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏராளமானவற்றை கொண்டு வந்தார். இந்த நிறுவனங்கள் மூலம் இப்போது எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கெல்லாம் காரணம் சந்திரபாபுவின் திட்டமே.

அரசியலில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. அவர் நல்ல முதல்-அமைச்சர். நடிகர் ரஜினி தனது உரையில் எந்த கட்சியையும், தலைவரையும் விமர்சிக்கவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடாவிட்டாலும், அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினியை தொடர்ந்து நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகர் சுமனின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Share this story