ஏதாவது ஒன்னாவது இருக்கனும் : ஈபிஎஸ்க்கு, ஓபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல்..

imsai

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

ஏதாவது ஒன்னாவது இருக்கனும் :

மிஸ்டர் எடப்பாடி.. என்னதான் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என நீங்க விரும்புவதை எல்லாம் வாங்கி வந்தாலும், மக்கள் மன்றமும் குறிப்பாக மனசாட்சி கொண்ட தொண்டர்களும் உமது சுயபட்டேபிஷேகத்தை அருவருப்போடுதான் பார்க்கிறார்கள்.

இதனை சரிப்படுத்த  போராட்டங்களை நடத்தியும், ஆளுநர் மாளிக்கைக்கு காவடி தூக்கியும் நீர் எடுக்கும் முயற்சிகளும், ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் போலவே பலன் அளிக்கப்போவதில்லை.

எம்.ஜி.ஆரின் விதிகளை திருத்திய உம்மால் ஒரு போதும் எம் ஜி ஆர் ஆக முடியாது. அதுபோல, அம்மா அமர்ந்த ஆசனத்தில் அத்துமீறி உட்கார்ந்துகொண்டு,

உமது அல்லக்கைகளை விட்டு, நிரந்தர பொதுச்செயலாளர் என்று கூலி கொடுத்து கோஷம் போட வைத்தாலும், உம்மால் நிரந்தரமெல்லாம் ஆக முடியாது. 

ஏன்னா.. அதுக்கெல்லாம் அறிவு, ஆற்றல், திறமை, பெருந்தன்மை, தயாளகுணம், தாயுமான  பண்பு வசீகரம் மக்களை ஈர்க்கும் குணம், நேர்மை.. இப்படி இதுல ஏதாவது ஒன்னாவது இருக்கனும்.

இதுல எதுவுமே இல்லாத உமது வன்புணர்வு அரசியல் மக்களிடமும் தொண்டர்களிடம், மேலும் மேலும் வெறுப்பை தான் தூண்டுமே தவிர பற்றுதலை உருவாக்காது.

புரியதா... அதனால, பழனிச்சாமி பேசாம பழைய வெல்லம் உருட்டும் வேலைக்கே போயிடலாம்.

வேடிக்கை மனிதர்கள் : 

ஆக, மோசமான மனிதர் எனத் தெரிந்தும்..பதவிக்கும் பணத்துக்கும் அல்லது நமக்கேன் வந்தது என்கிற பொறுப்பற்ற செயலுக்கும்,காரணமாக இருக்கும் வேடிக்கை மனிதர்களே சமூகத்தின் மிக மோசமான மனிதர்கள் என்றால்.. 

அதில் முதலிடத்தை பிடித்திருப்பவர்கள் எடப்பாடிக்கு காவடி தூக்கும் அந்த முன்னாள் அமைச்சர்களும், நான்கு பேரை தவிர்த்த அறுபது சட்டமன்ற உறுப்பினர்களும்.. 

கூடவே, மந்தை ஆடுகளாக நின்று தலை ஆட்டும் இரண்டாயிரத்து சொச்சம் பொதுக்குழு ஆடுகளும் தானே.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story