இருண்ட ஆட்சியின் இவர்கள், பரம்பரை அரசியல் வியாதி வியாபாரிகள் : திமுக மீது நாஞ்சில் பி.சி.அன்பழகன் சரமாரி தாக்கு.. 

By 
pca4

'முதல் அமைச்சர் ஸ்டானுக்கு புகழ் மகுடமாம், தமிழ்நாடு அரசு பெருமிதமாம்.!  தேர்தல் நாள் அன்று வரிப்பணத்தை கரியாக்கி அறிக்கை.! முதல்வர் வேற..? தமிழக அரசு வேறயா.? யானை தன் தலையில், மண்ணை அள்ளி கொட்டுகிறது' என திரைப்பட இயக்குனர், அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வெளியிட்டுள்ள கட்டுரை வருமாறு:

முதல்வர் கொறட்டை விட்டாலும், சங்கீதமென்றே சத்தம் போட்டு சொல்வார்கள் போலிருக்கு. தமிழக அரசின் ஊதாரி கடன் - 8 லட்சம் கோடியாம். திவாலுக்கு எதுக்கு தீபாவளி.?

3 - ஆண்டுகளில் ஊழலின் முன்னேற்றம் 400 - சதவீதமாம், ஒவ்வொரு மாதமும் ஊழல்களால் சதமடிக்கிறார்கள் தி.மு.க கவுன்சிலர்கள்.

* பாதம் தாங்கி கருணாநிதிதான்.. 1969 -ல் அண்ணா மறைவுக்கு பிறகு - ராஜாஜியின் சதி ஆலோசனைப்படி, புரட்சித்தலைவர் காலடியில் கருணாநிதி சொர்க்கத்தை கண்டதால்தான் நியமன முதல்வரானார்.

வறுமைக் கோட்டிற்கு கீழே நசுங்கிய கருணாநிதி குடும்பத்தை, புரட்சித்தலைவரும் - தலைவியும் ... மாறனின் கெஞ்சலுக்காக இலவசமாக 'எங்கள் தங்கம்' படத்தில் நடித்து கொடுத்ததால்தான் கோபாலபுர கொள்ளை கும்பல் லட்சாதிபதியாக முடிந்தது.

உளர்வாய் உதயநிதியே.. நீ பிறப்பதற்கு முன்பே, உன் கொள்ளை தாத்தா கருணாநிதி.. முரசொலியில் எட்டாவது வள்ளலை கவிதையாய் புகழ்ந்து - மையாய் வழிந்திருக்கிறார்... முடிந்தால் வாசிக்கவும்.

* அமைச்சர்களை ஊருக்குள் அனுமதிக்காமல், பொதுமக்கள் அவர்களை ஓட - ஓட விரட்டுவதால், ஸ்டாலினுக்கு தேர்தல் நிலவரம் - கலவரம் என்று தெரிந்து விட்டது. அதனால், ஞாயிற்றுக்கிழமை வக்கீல் ஆலந்தூர் பாரதி கோண வாயரை வைத்து, தி.மு.க.தலைவர்கள் ஓட்டு கேட்கிறார்கள். ஓட்டு மெஷின் மீதும் நம்பிக்கையில்லை என பைத்தியம் பார்த்த வைத்தியாக அலறுகிறார்கள்.

* ராஜபாளையத்தில் மகளிர் அரசு பேருந்து படிக்கட்டு கழன்று விழுந்து, விடியா ஆட்சியின் பரிதாபத்தை  காட்டுகிறது; ஓசிப் பஸ்சில் உயிரும் ஓசியாகி விட்டது.

1500 - கோடிகளுக்கு போக்குவரத்து துறை பேருந்துகளையும், பணிமனைகளையும் அடமானம் வைத்திருக்கிறது - ஓசி பேருந்துகள் கவலைக்கிடம்.

*“ஒரு வோட்டு தான் போடணுமா? இல்ல இரண்டு போடணுமா” ..?? ஓட்டு போட வந்த கருணாநிதி துணைவி ராஜாத்திக்கு வந்த சந்தேக - கேள்வி. 

முரசொலியும் - தயிர்வடையும் சாப்பிடும் கருணாநிதி சமாதிக்கு மேலே வாழ்கிறார்.

* 'காந்தியிடம் மட்டுமுள்ள அந்தப் பண்பை ஸ்டாலினிடம் காண்கிறேன்' என்கிறார் ஒத்த ஓட்டு முத்தையா கமல்..! கமலின் அரசியல் பாதையை, அவரது வயதான ரசிகர்களைப் போல, கூகுளும் அடையாளம் காணவில்லை.

* 2019 - பாராளுமன்றத் தேர்தலில், தமிழச்சி தங்கபாண்டியனை காட்டி, அழகாகயிருக்கும் இவருக்கு ஓட்டுப் போடுங்களென்று, உதயநிதி பொது ஜனங்களிடம் வழிந்தார்.

தன்னை அழகாக வைத்திருப்பதையே வேலையாக கொண்ட தமிழச்சியோ, 2019-ல் மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே - நின்று... பொதுமக்களை அச்சுறுத்தும், மதுபானக் கடையை மூடுவேனென்று வானளாவிய வாக்குறுதியை மீடியாக்கள் வழியே வீசினார்.

பாட்டிலுக்கு பத்துரூபா சேர்த்து பார்க்கும் தி.மு.க ஆட்சிதான் இப்போதும் நடக்கிறது. அதே பார்வாடை ஸ்டேஷன் வரை அடிக்கிறது. குடிமகன் படிக்கட்டுகளில் தியானம் பண்ணுகிறார்கள். எம்.பி.யாக தொடரும் தமிழச்சி ஓட்டு கேட்டு வரும்போது ஊன்றுகோலும், வீட்டிலிருக்கும்போது சொர்ணக்கா ஊழித்தாண்டவமாடி நடிகையர் திலகத்திற்கே டப்பைட் கொடுக்கிறார்.

* கடலையே தூர்வார புறப்பட்ட டி.ஆர் பாலுவுக்கு, ஜேசி எந்திரம் மூலம் பூத் தூவினர்; மண்ணாக போகட்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ.!

கஞ்சா போதையில் காரை ஓட்டிய இளைஞன், மதுரையில் சிலையில் சிலைபோல நிற்கான். கஞ்சா என்று தெரிந்ததும்,  கஞ்சா தி.மு.க வை பதுக்க.... காவல்துறை கஞ்சா ஆசாமியை காப்பாற்ற ஆட்டோவில் தூக்கி போட்டு ஓடுகிறது. இருண்ட ஆட்சியில் காவல்துறையும் பிம்பிலாப்பி பிளாப்பி தான்.

* வாழ்க்கையில் உயரும் வரை காதை மூடிக்கொள்ள வேண்டும். உயர்ந்த பிறகு வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

ஸ்டாலினின் 70. MM  அகன்ற வாய், அப்பன் நாக்கால் அவதூறுகளை அமிலமாக கொட்டுகிறது.

* சூர்ய வம்சம் படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கினேன். ஆகவே,  விருதுநகரில் மனைவி ராதிகாவை எம்.பி.யாக்குவேனென்று நடுவீதியில் மனைவியிடம் பொதுக் குழுவை கூட்டி, காலையில் பிஜேபியிடம் சமுத்துவத்தை இணைத்த சரத்குமாரும்; தேர்தல் படப்பிடிப்பில் காமெடியாக பிசியாகி கெல்மட் போடாமல் ராதிகா சகிதம் சுற்றுலா ...

* கனிமொழி - மோடிக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப் போறாராம்..! முதல்ல, சாக்ரடீஸ்சுக்கு தம்பி... அதாம் உங்க அண்ணன் ஸ்டாலினுக்கு தமிழ் சுற்றுக் கொடுங்கள். துண்டு சீட்டுல பொள்ளாச்சிண்ணி எழுதி கொடுத்தா, புள்ளதாச்சிண்ணி படுச்சி வாக்காளர்களை அரை மயக்கமடைய செய்கிறாரு.

தூத்துக்குடியில அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இளவரசர் உதயநிதி வாராராம்; ரோடெங்கும் பத்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, ஆறடி மனிதர்களை இடறி விழ வைக்கிறாரு.

* பரப்புரையில், உதயநிதி உளறலை கேட்டு, கருணாநிதியே மெரினா பீச்சில் புரண்டு படுக்கிறாராம்.

பக்கத்து வீட்டு செங்கல்லை திருடினாலும், மதுரை எய்ம்ஸ் செங்கல்லை திருடினாலும், உதயநிதி
செங்கல் திருடர் தான்.

* சேலம் சித்த வைத்தியசாலை லேகிய விளம்பரம் போல, பரம்பரை பரம்பரையாக பூட்டன், பாட்டன், தாத்தா , மகன், பேரன் .... கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, இன்பநிதி, துன்பநிதி... என   இவர்களும் பரம்பரை அரசியல் வியாதி வியாபாரிகள்.

* தாலிக்கு தங்கம் கொடுத்தது தங்கத் தாரகை.! தாலி அறுப்பு மாநாடு நடத்துகிறார் இந்து மத விரோதி ஸ்டாலின் ஆதரவு பெற்ற வீரமணி..!

கல்வி கடன் , விவசாய கடன்,  கூட்டுறவு நகைக்கடன்.. 2021 - தேர்தல் சீசன் பொய் மூட்டை ரத்துகள்.... அழுகி துர்நாற்றமடிக்கிறது.

ஸ்டாலின் காதில், யாராவது காலை கடன் என்று கூவினாலும், அசராது அதையும் ரத்து பட்டியலில் சேர்த்து விடுவார்.

* ஏப்ரல் 13, 1992 - தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றுதான், 29 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கென தனியாக மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைத்து சாதனை படைத்தார் புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள்.

பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 50% கொடுத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிர வைத்தார் புரட்சித்தலைவி,

* சேலத்தில் பிரச்சாரம் செய்த செல்வகணபதியிடம், பெண்கள்.. " 4 நாட்களாக தண்ணீர் இல்லை ... துணியெல்லாம் அழுக்கு' என்று சொன்னால்... "நானே துணி துவச்சி காயப்போடுகிறேன்.." என தண்ணீருக்கு தீர்வு சொல்லாமல், கீழ்பாக்கத்திலிருந்து, திரும்பியவர் போல் உளறுகிறார்.

அமைச்சர் தாமோதரன் வேட்பாளரோடு சென்று, சிற்பக் கூட சிலைக்கு உளியோடு போஸ் கொடுக்கிறேன்  என்று, ஆர்வக்கோளாறில் அம்மி கொத்தி சிலையின் மூக்கை உடைக்க... பார்த்த சிற்பிக்கு தடாலடி மயக்கம்.

அமைச்சர் மஸ்தான் .... குச்சி ஐஸ் வண்டிபக்கம் - வேட்பாளரோடு நின்று... யாரும் கொட்டாவி விட வாயை திறந்தாலும்... குச்சி ஐஸை சொருகி.... அதிர்ச்சி வைத்தியம் செய்து பைத்தியமாக சிரிக்கிறார்.

உதயநிதி, ஓடிச்சென்று 80 வயது கிழவியை இழுத்து - கட்டிபிடி விளையாட்டு காட்ட... புகைப்படம் இணையத்தில் வைரலானது. காரணம், பாட்டியின் சேலையில் புரட்சித்தலைவரின் இரட்டை இலை;  பார்த்த தி.மு.க.காரர்களுக்கோ அதிர்ச்சி அலை..!

* தி.மு.க.வின் 21-ம் ஆண்டு, தேர்தல் அறிக்கையில், பெண் போலீஸ்களை வி.ஜ.பி க்களுக்காக தெருவில் காக்க வைக்கக் கூடாதென்றும், இரண்டாம் நிலை காவலர்கள் எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகளாகுவதை குறைப்போமென்றும், களவாணித்தன வாக்குறுதிகளை அள்ளி தெளித்தனர். முதல்வர் பாதையிலேயே மகளிர் காவலர்கள் கண்ணீரும் கவலையுமாக நிற்கிறார்கள்.

* அ.இ.அ.தி.மு.க.வை அழிப்பேன் என்பார்கள் தான் அழிந்தார்கள். அண்ணாமலை ஒரு தொழிலாளி; மோடி முதலாளி. அண்ணாமலை எந்த நிமிடமும் கழற்றி விடப்படுவாய்;  உனக்காக போராட உன் கார் டிரைவரும் வரமாட்டான். இதுவரை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பதவி உனக்கில்லை. எடப்பாடியார் மக்களால் தேர்வான இமயம்.

* 'பிஜேபிக்கு, பிரச்சாரம் செய்ய மாட்டேன்; கனத்த இதயத்துடன் விலகுகிறேன்' என்ற  குஷ்பூவின் கண்ணீர் அறிக்கைக்கு, அண்ணாமலை பலத்த தியானத்திலிருப்பதேன்?

* பொற்கால ஆட்சி செய்த கர்மயோகி காமராஜரை, முரசொலி கூவ நாளேட்டில், கழுவேற்றி அழகு பார்த்த கருணாநிதியின் தி.மு.க விற்கு மக்களின் ஓட்டல்ல.! காமராஜரை தலைவர் என்றும்; அண்ணா எனது அரசியல் வழி காட்டியென்ற பொன் மனச்செம்மல் தவத்தில் விளைந்த அ.இ.அ.தி.மு.க.விற்கு மக்களின் உரிமைக்குரலான திரளான ஓட்டு..! தற்குறி.. தி.மு.க விற்கு எதிராக ஒற்றை விரலால் ஓங்கி அடித்து மக்கள் துவைத்துள்ளனர்.

தேர்தல் காலத்தில்தான், செத்தவர்களும் ஆவியாக தி.மு.க.விற்கு ஓட்டுப் போடும் அதிசயம் நடக்கும்.

* சிதம்பரம் நிதி அமைச்சராக குப்பை கொட்டி நாட்டை நாசம் செய்த தருணத்தில்தான், நாசித் நோட்டு மெஷின்கள் கூளாக்கப்படாமல்.... கூலாக, கள்ள நோட்டடிக்க பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டது.

கள்ள ஓட்டு ஸ்டாலின்... கள்ள நோட்டு சிதம்பரம்... பலே கூட்டணி.!

எடப்பாடியாரை  ஒரு முறை முதல்வராக்கிய சேலம் மினி சிங்கப்பூராகி விட்டது. கருணாநிதியை ஐந்து முறை முதல்வராக்கிய திருவாரூக்கு கூகுளும் பாதை தேடுகிறது" என அதிமுக நட்சத்திர பேச்சாளர், நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Share this story