சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள் : முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்

They have walled off Chennai Chief Minister Stalin

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகளில், போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், நேற்று பிற்பகல் முதல், பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில், மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை, நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்  கூறியதாவது :

வானிலை மையமே எதிர்பாராத வகையில் மழையை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை, மோட்டர்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில், மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும் .

கடந்த 10 ஆண்டுகளாக, சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை. 

அடுத்த பருவமழைக்குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்' என்றார்.
*

Share this story