'இது நம்ம கெளரவம்' : மருது அழகுராஜ் பெருமிதம்..  

By 
marudhu170

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அதற்கான அடிக்கல்லை நாட்டினார். 

புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைந்துள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. 

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :

''நமக்கான பாராளுமன்ற நடைமுறை பிரிட்டிஷார் வகுத்துக் கொடுத்தது என்றால், 
நமக்கான பாராளுமன்ற கட்டிடமும்
அந்த பிரிட்டனின் காலனி ஆட்சியே கட்டிக் கொடுத்தது.. என்னும் 
கடந்த எழுபத்தைந்து ஆண்டு கால உறுத்தலை துடைத்தெறிந்து,

நூற்று முப்பது கோடி இந்திய மக்களின் வரிப்பணத்தில்
நிமிர்ந்து நிற்கிறது
நமக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம்.. என்றால்
இதற்கு காரணமான பா.ஜ.க. அரசை பாராட்டலாம் தானே..''

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story