அ.தி.மு.க.வை அழிப்பேன் என்றவர்கள் தான் அழிந்தார்கள்: அண்ணாமலைக்கு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் பதிலடி.. 

By 
pca3

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து, திரைப்பட இயக்குனரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் அன்பழகன், ஆகியோர் ராசிபுரம் - குருசாமி பாளையத்தில், வாக்கு சேகரித்தனர். உடன் ராசிபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் வேம்பு சேகர் உள்ளார். பரப்புரையின்போது, நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது...

'ஏப்ரல் 19-ந் தேதி பொதுஜனங்களுக்கு பொதுத்தேர்தல். ஜூன் 19-ந்தேதி   தி.மு.க கும்பல்களுக்கு  தனி தேர்தல். 

உதயநிதி உளறலை கேட்டு, கருணாநிதியே மெரினா பீச்சில் புரண்டு படுக்கிறாராம். பக்கத்து வீட்டு செங்கல்லை திருடினாலும், மதுரை எய்ம்ஸ் செங்கல்லை திருடினாலும், உதயநிதி
செங்கல் திருடர் தான்.

சேலம் சித்த வைத்தியசாலை லேகிய விளம்பரம் போல, பரம்பரை பரம்பரையாக பூட்டன், பாட்டன், தாத்தா , மகன், பேரன், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, இன்பநிதி, துன்பநிதி... என   இவர்களும் பரம்பரை அரசியல் வியாதி வியாபாரிகள்.

தாலிக்கு தங்கம் கொடுத்தது தங்கத்தாரகை.! தாலி அறுப்பு மாநாடு நடத்துவது,  இந்துமத விரோதி ஸ்டாலின் ஆதரவு பெற்ற வீரமணி.

கல்விக்கடன் , விவசாயக் கடன், கூட்டுறவு நகைக்கடன்.... 2021 - தேர்தல் சீசன் பொய் மூட்டை ரத்துகள்.... அழுகி துர்நாற்றமடிக்கிறது.

ஸ்டாலின் காதில் யாராவது காலைக்கடன் என்று கூவினாலும், அசராது அதையும் ரத்து பட்டியலில் சேர்த்து விடுவார்.

ஏப்ரல் 13, 1992 தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றுதான் 29 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கென தனியாக மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைத்து சாதனை படைத்தார் புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள்.

பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 50% கொடுத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிர வைத்தார் புரட்சித் தலைவி,

சேலத்தில் பிரச்சாரம் செய்த செல்வகணபதியிடம், பெண்கள் - 4 நாட்களாக தண்ணீர் இல்லை துணியெல்லாம் அழுக்கு என்று சொன்னால்... 'நானே துணி துவச்சி காயப்போடுகிறேன்' என  தண்ணீருக்கு தீர்வு சொல்லாமல் கீழ்பாக்கத்திலிருந்து திரும்பியவன் போல் உளறுகிறார்.

அமைச்சர் தாமோதரன் வேட்பாளரோடு சென்று, சிற்பக்கூட சிலைக்கு உளியோடு போஸ் கொடுக்கிறேன் என்று, ஆர்வக்கோளாறில் அம்மி கொத்தி சிலையின் மூக்கை உடைக்க.... பார்த்த சிற்பிக்கு தடாலடி மயக்கம்.

அமைச்சர் மஸ்தான் .... குச்சி ஐங்காரர் பக்கம் நின், யாரும் கொட்டாவி விட வாயை திறந்தாலும், குச்சி ஐஸை சொருகி, அதிர்ச்சி வைத்தியம் செய்து பைத்தியமாக சிரிக்கிறார்.

உதயநிதி ஓடிச்சென்று 80 வயது கிழவியை இழுத்து  கட்டிப்பிடி விளையாட்டு காட்ட... புகைப்படம் இணையத்தில் வைரலானது. காரணம் பாட்டியின் சேலையில் புரட்சித்தலைவரின் இரட்டை இலை. பார்த்த தி.மு.க. காரர்களுக்கோ அதிர்ச்சி அலை .

தி.மு.க.வின் 21-ம் ஆண்டு, தேர்தல் அறிக்கையில், பெண் போலீஸ்களை வி.ஜ.பி க்களுக்காக தெருவில் காக்க வைக்கக் கூடாதென்றும், இரண்டாம் நிலை காவலர்கள் எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகளாகுவதை குறைப்போமென்றும், களவாணித்தன வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தனர்; முதல்வர் பாதையிலேயே மகளிர் காவலர்கள் கண்ணீரும் கவலையுமாக நிற்கிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வை அழிப்பேன் என்றவர்கள் தான் அழிந்தார்கள். அண்ணாமலை ஒரு தொழிலாளி; மோடி முதலாளி ... அண்ணாமலை,  நீ எந்த நிமிடமும் கழற்றி விடப்படுவாய்.... உனக்காக போராட உன் கார் டிரைவரும் வரமாட்டான். இதுவரை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பதவி உனக்கில்லை. எடப்பாடியார் மக்களால் தேர்வான இமயம்.

'பிஜேபிக்கு, பிரச்சாரம் செய்யமாட்டேன். கனத்த இதயத்துடன் விலகுகிறேன்' என்ற  குஷ்பூவின் கண்ணீர் அறிக்கைக்கு... அண்ணாமலை பலத்த தியானத்திலிருப்பதேன்?

பொற்கால ஆட்சி செய்த கர்மயோகி காமராஜரை, முரசொலி கூவ நாளேட்டில், கழுவேற்றி அழகு பார்த்த கருணாநிதியின் தி.மு.க விற்கு உங்கள் ஓட்டா?  காமராஜரை தலைவர் என்றும்.. அண்ணா எனது அரசியல் வழி காட்டியென்ற..  பொன்மனச்செம்மல் தவத்தில் விளைந்த அ.இ.அ.தி.மு.கவிற்கு உங்கள் உரிமை குரலான ஓட்டா? பகுத்தறிவு... தி.மு.க.வை ஒற்றை விரலால் ஓங்கி அடித்து துவைக்கட்டும்.

எடப்பாடியாரை  ஒருமுறை முதல்வராக்கிய சேலம் மினி சிங்கப்பூராகி விட்டது. கருணாநிதியை ஐந்து முறை முதல்வராக்கிய திருவாரூக்கு கூகுளும் பாதை தேடுகிறது.

தினகரனுக்கு வனவாசம் முடிந்துவிட்டது..? இனி பட்டாபிசேகம்தான்..?  தினகரனும் ஒரு ராமர் தான்..? பிஜேபி கொடுத்த திகார் திகிலை அண்ணாமலை மறந்திருக்கலாம். தினகரன் கண்கள் மறக்காது.

கருணாநிதியும் இயேசுவும் ஒன்றாம்.. ! சபாநாயகர் அப்பாவு இயேசுவுக்கு துணைவிகள் உண்டென்கிறாரா..?உச்சி கிறுக்குகள்.... மைக்கில் செல்சியஸை ஏற்றுகிறார்கள்.

கனிமொழி - மோடிக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப் போறாராம்... முதல்ல சாக்ரடீஸ் தம்பி... அதான் உங்க அண்ணன் ஸ்டாலினுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள். துண்டு சீட்டுல பொள்ளாச்சிண்ணி எழுதி கொடுத்தா,  புள்ளதாச்சிண்ணி படுச்சி வாக்காளர்களை அரை மயக்கமடைய செய்கிறாரு.

தூத்துக்குடியில அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இளவரசர் உதயநிதி வாராராம்.. ரோடெங்கும் பத்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, ஆறடி மனிதர்களை இடறி விழ வைக்கிறாரு' என நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.

Share this story