15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் : அண்ணாமலைக்கு, ஆர்.எஸ்.பாரதி கெடு விதிப்பு

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார்.
இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அண்ணாமலை சொல்லவில்லை.
* அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார்.
* அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது.
* அண்ணாமலை, பட்டியல் வெளியிட்ட 12 பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
* தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள்.
* தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் சாதாரண குடிமகன் கூட வழக்கு தொடரலாம்.
* அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்.
* அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை.
* அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார்.
* திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
* எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைவிட அண்ணாமலை பெரும் தலைவர் இல்லை.
* ரூ.1,408 கோடி சொத்தை 15 நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும்.
* ஆருத்ரா முறைகேட்டில் ரூ.84 கோடியை அண்ணாமலை பெற்றுள்ளார்.
* திமுகவினர் எதற்கும் பயப்படமாட்டார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்