சந்திரபாபு நாயுடுவுக்கு, இந்த ஞானம் அப்போது ஏன் வரவில்லை : ரோஜா சாடல்

To Chandrababu Naidu, why this wisdom did not come then Roja Sadal  '

தன்னைத் தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த மக்களுக்கு, குடிநீர் வசதி கூட சந்திரபாபு நாயுடு செய்து கொடுக்கவில்லை' என்றார் ரோஜா.

நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதியில் தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்கு, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குப்பம் தொகுதி வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு சாட்சியாக உள்ளது.

தன்னைத் தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த மக்களுக்கு, குடிநீர் வசதி கூட அவர் செய்து கொடுக்கவில்லை. குப்பத்தில் சொந்தமாக வீடு கட்டிக்கொள்வேன் என்று இப்போது கூறுகிறார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த மரண அடி காரணமாக, சந்திரபாபு நாயுடு இப்பகுதியில் வீடு கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.

இந்த ஞானம் இதற்கு முன் ஏற்படாதது ஏன்?' என்றார்.
*

Share this story