திமுக அமைச்சருக்கு, டிடிவி.தினகரன் கண்டனம்..

ttv.dhinakaran

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில், பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்த வகையில் நியாயம்? இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Share this story