தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரனின் வேட்புமனு நிறுத்திவைப்பு.! என்ன காரணம் தெரியுமா?

By 
ttv7

தேனி மக்களவை தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 1400க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது. 

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அவரது வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார வாகனத்தில் வந்து டிடிவி. தினகரன் வேட்புமனு செய்ததாகவும், மேலும் தினகரனின் வழக்கு விவரங்கள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று திமுக, அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தேனியில் டிடிவி.தினகரனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this story