1 ரூபாய் வரி கொடுத்தால், 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறது: மத்திய அரசு மீது  உதயநிதி விமர்சனம்.. 

By 
udhayanidhi10

திருப்பூரில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டங்களில் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

 “ 4 ஆவது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பார்க்கிங் வசதி  என திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என திருப்பூரை மையமாக வைத்து தான் சொல்லியிருப்பார்கள் போல் என நினைக்கிறேன்.

எனது வீட்டில் தான் பயன்படுத்தும் பொருட்களில் முக்கால்வாசி பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள். முதல்வரின் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் தான். இனிமேல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருளை தான் தயாரிக்க வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தேன்.” என்று தெரிவித்தார்.

மேலும் “ தந்தை பெரியாரும் , அண்ணாவும் முதல் முதலில் சந்தித்த இடத்திற்கு அரசு முறை பயணமாக முதல் முறை வந்துள்ளேன். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். நாம் மத்திய அரசுக்கு கொடுத்த வருவாய் 6 லட்சம் கோடி ஆனால் அவர்கள் நமக்கு கொடுத்து 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ தமிழ்நாட்டு மக்கள் வரியாக 1 ரூபாய் கொடுத்தால், அவர்கள் வெறும் 29 பைசா மட்டுமே திருப்பி கொடுக்கின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிககமாக தருகின்றனர். இந்த நெருக்கடியில் தமிழகத்தின் தந்தையாக இருந்து பார்த்து பார்த்து முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.

Share this story