ஒரு கோடி இளைஞர்களுக்கு, இலவச ஸ்மார்ட்போன்- டேப்லெட் : உ.பி.அரசு இன்று வழங்குகிறது

UP government offers free smartphone-tablet to one crore youth today


ஒரு கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள்- உத்தரப்பிரதேச அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்திற்காக, முதற்கட்டமாக 60 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள், 40 ஆயிரம் டேப்லெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஒரு கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை அம்மாநில அரசு இன்று வழங்குகிறது. 

இதற்காக, அம்மாநிலம் முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்டுகளையும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். 

இந்த திட்டத்திற்காக, முதற்கட்டமாக 60 ஆயிரம் ஸ்மார்ட்போன்களும், 40 ஆயிரம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

Share this story