அவசரமும் அவசியமும் : ஓபிஎஸ் தரப்பின் 3 முக்கிய தகவல்கள்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :
1] உச்சநீதி மன்றத்திலோ அல்லது உயர்நீதி மன்றத்திலோ தீர்ப்பு வருவதற்கு முன்பெல்லாம் அண்ணாமலை அவசரப் பயணமாக, டெல்லிக்கு விரைகிறாரே என்னவாக இருக்கும்.?
2] ஒ.பி.எஸ்ஸின் பெருந்தன்மையும், எடப்பாடியின் மிருகக்குணமும் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் ஒப்பீடு செய்யப்பட்டு, பெரும் கருத்தாக்கத்தை அது உருவாக்கி வருகிறது.
எடப்பாடியின் முறைகேடுகளால் குவிக்கப்பட்ட பணத்தை கொண்டு, சகலத்தையும் அவர் கொள்முதல் செய்யலாமே தவிர எதிர்காலத்தில் அவரே ஊருக்குள் ஓட்டுக் கேட்பதற்கு கூட செல்ல முடியாத நிலை உருவாகும்.
பத்தரை சதவீத இடஒதுக்கீடு, பதிமூன்று பேர் துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை கொள்ளை விவகாரங்கள், இவற்றோடு சேர்ந்த அரசியல் அபகரிப்பு என எடப்பாடியை மக்கள் அயோக்கியனாகவும் நன்றியுணர்வு கடுகளவும் இல்லாத துரோகியாகவும் நயவஞ்சகனாகவும் அரசியலில் பிறரை அழித்து, தன்னை உயர்த்திக் கொள்ளத் துடிக்கிற தற்குறியாக மட்டுமே மக்கள் அவரை பார்க்கிறார்கள்.
எனவே, தங்களது ஈகைக் குணத்தாலும் வாகைத் திறத்தாலும் ஈர்த்து, தமிழக மக்களை வசீகரித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்னும் இடத்தில் எடப்பாடி என்றால்..அது மலரையும் மலத்தையும் ஒப்பிடுகிற பாவ காரியம் என பதறுகிறார்கள்.
எனவே, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால், எடப்பாடி இல்லாத அண்ணா தி.மு.க. உருவாக வேண்டும். தவறினால், விதையிட்டு வளர்த்தது எம்.ஜி.ஆர். பகையிட்டு அழித்தது எடப்பாடி என்பதே வரலாறாகிவிடும்.
3] தொண்டர்களின் அமைதியும்.. ஒவ்வொரு வினாடி மெளனமும் எடப்பாடி என்கிற பதவிப்பித்து மனநோயாளியால், கட்சி அழிக்கப்படும் அபாயத்தை எட்டுகிறது என்பதை உணரவேண்டும். எனவே, தொண்டர்கள் ஒன்றிணைந்து எடப்பாடியை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
இதுதான் கழகத்தை காப்பாற்ற தேவையாகும் அவசியமும் அவசரமும்...
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.